UPDATED : அக் 09, 2026 06:50 PM
ADDED : அக் 09, 2026 06:46 PM
திண்டுக்கல்: ‘திண்டுக்கல் குள்ளனம்பட்டி அரசு ஐ.டி.ஐ.,யில் அக்.,12ல் பிரதான் மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் நடக்க உள்ளது’ என கலெக்டர் துர்கா தெரிவித்துள்ளார்.
அவரது செய்திக்குறிப்பு:
மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு ஐ.டி.ஐ., இணைந்து நடத்தும் பிரதான் மந்திரி தொழிற்பழகுநர் சேர்க்கை முகாம் திண்டுக்கல் நத்தம் ரோடு குள்ளனம்பட்டி அரசு ஐ.டி.ஐ., வளாகத்தில் அக்.,12ல் காலை 9:00 முதல் மாலை 4:00 மணி வரை நடக்க உள்ளது.
திண்டுக்கல்லில் உள்ள அரசு, தனியார் தொழில் நிறுவனங்கள் பங்கேற்று தங்களுக்கு தேவையான தொழில் பிரிவுகளில் தொழிற்பழகுநர் பயிற்சி வழங்க, பயிற்சியாளர்களை தேர்வு செய்ய உள்ளனர்.
இம்முகாமில் தொழிற்பழகுநராக சேர்க்கை செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு மாதாந்திர உதவித்தொகையாக குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரத்து 560 முதல் ரூ.12 ஆயிரம் வரை வழங்கப்படும்.
எனவே இதுவரை தொழிற்பழகுநர் பயிற்சி முடிக்காத அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் தேர்ச்சி பெற்ற பயிற்சியாளர்கள், 8, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் முகாமில் கலந்து கொண்டு பயன்பெறலாம் என தெரிவித்து உள்ளார்.
