/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
புதை குழிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு
/
புதை குழிகளில் தொல்லியல் துறையினர் ஆய்வு
ADDED : பிப் 22, 2026 07:19 AM

நெய்க்காரப்பட்டி. பிப். 22 -: பழநி நெய்க்காரப்பட்டி இரவிமங்கலம் பகுதியில் பழமையான புதைகுழிகள் குறித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்தனர்.
இரவிமங்கலம் பகுதியில் 2500 ஆண்டுகள் பழமையான புதைகுழிகள் உள்ளன. இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளர் நாராயணமூர்த்தி தெரிவித்திருந்தார்.
இதில் இருந்த புதை குழிகள், தமிழர்களின் பாதுகாக்கப்பட்ட தொன்மையான சின்னமாக அறிவித்து தொல்லியல் துறையினர் ஆய்வு செய்ய மனு அளித்தார்.
இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்நிலையில் தொல்லியல் துறை துணை இயக்குனர் யத்தீஸ்குமார், உதவி இயக்குனர் பிரபாகரன், திண்டுக்கல் தொல்லியல் அலுவலர் பரத் ஆகியோர் நேற்று அப்பகுதியில் ஆய்வு செய்தனர்.
தொல்லியல் துறை ஆய்வாளர் நாராயணமூர்த்தி உடனிருந்தார்.

