/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நீங்கள் நலமா: அமைச்சர் சக்கரபாணி கலந்துரையாடல்
/
நீங்கள் நலமா: அமைச்சர் சக்கரபாணி கலந்துரையாடல்
ADDED : மார் 08, 2024 01:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்த கருத்துக்களை கேட்டறியும் புதுமையான திட்டமான நீங்கள் நலமா திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் தொடங்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து அமைச்சர் சக்கரபாணி ஒட்டன்சத்திரம் அலுவலகத்தில் இருந்து பயனாளிகளிடம் அலைபேசி மூலம் தொடர்பு கொண்டு திட்டப் பயன்கள் குறித்து கேட்டறிந்தார். தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த வசந்தி, ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த பூங்கொடி, திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஆரோக்கியசாமி, கடலூர் மாவட்டத்தை சேர்ந்த அரவாளி, திருச்சி மாவட்டத்தை சேர்ந்த இளவரசியிடமும் அலைபேசி வாயிலாக திட்டங்களின் பயன்கள் குறித்து கேட்டறிந்தார்.

