/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலத்தில் தகராறு, அடிதடி: 4 பேர் காயம்
/
ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலத்தில் தகராறு, அடிதடி: 4 பேர் காயம்
ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலத்தில் தகராறு, அடிதடி: 4 பேர் காயம்
ஹிந்து மக்கள் கட்சி ஊர்வலத்தில் தகராறு, அடிதடி: 4 பேர் காயம்
ADDED : ஆக 31, 2025 07:09 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்துாரில் நேற்று மாலை ஹிந்து மக்கள் கட்சி சார்பில், விநாயகர் சிலைகள் ஊர்வலம் நடந்தது. வேடசந்துார் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று குடகனாறு நீர்நிலையில் கரைக்கப்பட்டது.
சிலையை யார் முதலில் கொண்டு செல்வது என்பதில், இரு தரப்பினர் இடையே வாக்குவாதம் கைகலப்பு ஏற்பட்டது.
இதில் வேடசந்துார் பகுதியைச் சேர்ந்த சரவணன் 25, கார்த்தி 23, மணி27, நந்தகுமார் 24, காயமடைந்து வேடசந்துார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். மேலும் மூன்று பேர் லேசான காயமடைந்தனர். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.