/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
டாக்டர்கள், செவிலியர்களிடம் வாக்குவாதம்
/
டாக்டர்கள், செவிலியர்களிடம் வாக்குவாதம்
ADDED : செப் 28, 2024 04:29 AM
திண்டுக்கல், : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் வழக்கறிஞர் எனக்கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டவர் குறித்து டாக்டர்கள்,செவிலியர்கள் டீனிடம் புகாரளித்தனர்.
திண்டுக்கல் கன்னிவாடியை சேர்ந்த ஒருவர் நேற்று முன்தினம் இரவு தலையில் காயம் ஏற்பட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு வந்தார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் தற்போதைக்கு இங்கு சிகிச்சை கொடுக்கிறோம். தேவைபட்டால் மதுரை அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்ல வேண்டும் என பாதிக்கப்பட்டவரின் உடன் வந்தவர்களிடம் தெரிவித்தனர். அப்போது ஒருவர் தன்னை வழக்கறிஞர் எனக்கூறிக்கொண்டு ஏன் நாங்கள் மதுரை செல்ல வேண்டும். இங்கே தான் இருப்போம். நோயாளியின் நிலைமை குறித்த ஆவணங்களை காட்டுங்கள் நான் போட்டோ எடுத்து கொள்கிறேன் என டாக்டர்கள்,செவிலியர்களை மிரட்டும் தொனியில் பேசி பணி செய்யவிடாமல் தடுத்தார். தொடர்ந்து வாக்குவாதமும் செய்தார். இது தொடர்பாக டாக்டர்கள்,செவிலியர்கள் மருத்துவமனை டீன் சுகந்திராஜகுமாரியிடம் எழுத்து பூர்வமாக புகாரளித்துள்ளனர்.