ADDED : ஜூலை 29, 2025 01:02 AM
பழநி: பழநி பிரண்ட்ஸ் அரிமா சங்கத்தின் இரண்டாம் ஆண்டு
பழந பிரண்ட்ஸ் அரிமா சங்கம் சார்பில் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நடைபெற்றது. முன்னாள் மாவட்ட ஆளுநர் ரவீந்திரன் பதவி பிரமானம் செய்து வைத்தார். தலைவராக ராஜபாண்டியன், செயலாளராக சேக்ஸ்பியர், செயல்பாடு செயலாளராக வெங்கடேஸ்வரன், பொருளாளராக முருகானந்தம் பதவி ஏற்றனர். புதிய உறுப்பினர்களை அரிமா சங்க சுப்புராஜ் சங்கத்தில் இணைத்தார்.
தமிழ்நாடு வணிகர் சங்க பழநி தலைவர் ஜேபி சரவணன், திண்டுக்கல், தேனி ஒருங்கிணைப்பாளர் ஸ்டாலின்ஆரோக்கியராஜ், மண்டல தலைவர் ஹரிகரன், வட்டாரத் தலைவர் மாசிலாமணி, அரிமா சங்க மயில்சாமி, மனோகரன், விமல்குமார், அசோக்பெருமாள், நவநீதன், குமார், ராமச்சந்திரன், நாகராஜன், கார்த்திக், ரவி, சுந்தரம், முகமது சுல்தான், மகாமுனி, கண்ணன் கலந்து கொண்டனர்.