/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநியில் 107 கி.மீ.,ல் பாதாள சாக்கடை திட்டம் ரோடுகளை உடனுக்குடன் சீரமைக்கவும் ஏற்பாடு
/
பழநியில் 107 கி.மீ.,ல் பாதாள சாக்கடை திட்டம் ரோடுகளை உடனுக்குடன் சீரமைக்கவும் ஏற்பாடு
பழநியில் 107 கி.மீ.,ல் பாதாள சாக்கடை திட்டம் ரோடுகளை உடனுக்குடன் சீரமைக்கவும் ஏற்பாடு
பழநியில் 107 கி.மீ.,ல் பாதாள சாக்கடை திட்டம் ரோடுகளை உடனுக்குடன் சீரமைக்கவும் ஏற்பாடு
ADDED : ஏப் 09, 2025 03:33 AM
பழநி, : பழநி நகராட்சி 33 வார்டுகளில் ரூ.95 கோடியில் அமையும் பாதாள சாக்கடை 107 கி.மீ.,ல் அமைய உள்ளது. இதற்காக தோண்டப்படும் ரோடுகளை உடனுக்குடன் சீரமைக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
பழநி நகராட்சி 33 வார்டுகளில் ரூ.95 கோடியில் பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்துதல் குறித்த விளக்க கூட்டம் நகராட்சி தலைவர் உமா மகேஸ்வரி தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கந்தசாமி, ஆராய்ச்சி பொறியாளர் ராஜவேலு, ஒப்பந்ததாரர் பாலு முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். இதில் கவுன்சிலர்கள் விவாதம் :
பாலு, ஒப்பந்ததாரர் : மூன்று ஆண்டுகளில் பணி நிறைவடையும். அதன் பின் ஆறு மாத காலம் சோதனை ஓட்டம் நடைபெறும். பணி நிறைவடைந்த பிறகு இயக்குதல், பராமரிப்பு பணிகளை ஐந்து ஆண்டுகள் திட்டத்தை நிறுவனம் கவனிக்கும்.
33 வார்டுகளில் 107 கிலோமீட்டர் அளவிற்கு பாதாள சாக்கடை திட்டம் நிறைவேற்றப்படும். 2011 மக்கள் தொகை கணக்கும்படி 21 ஆயிரத்து 554 குடியிருப்புகளுக்கு இணைப்புகள் வழங்கப்படும். எட்டு உந்து நிலையங்கள் ,இரண்டு பம்பிங் நிலையங்கள் அமைக்கப்படும். பம்பிங் நிலையங்களிலிருந்து நேரடியாக சுத்திகரிப்பு நிலையத்திற்கு சாக்கடை கழிவு கொண்டு செல்லப்படும்.
கந்தசாமி, துணைத் தலைவர் (மார்க்சிஸ்ட்): உந்து நிலையங்கள் எங்கு அமைக்கப்படும் என்பதை ஒப்பந்ததாரர் விளக்க வேண்டும்.
ஒப்பந்ததாரர்: அண்ணா பல்கலை ஒப்புதல் பெற வரைபடங்கள் வைக்கப்பட்டுள்ளன ஒப்புதல் பெற்றவுடன் வரைபடம் வழங்கப்படும்.
தீனதயாளன் (தி.மு.க.,): உந்து நிலையங்கள் அமைக்கப்படும் இடங்களில் மறுசுழற்சி செய்யும் நிலையங்கள் அமைக்கும் வகையில் திட்ட உள்ளதா.
ஒப்பந்ததாரர்: திட்ட மதிப்பீட்டில் மறுசுழற்சி மையங்கள் குறிப்பிடப்படவில்லை அதற்காக நகராட்சியில் தனி தீர்மானம் நிறைவேற்றி ஒப்புதல் பெற வேண்டும்.
பத்மினி முருகானந்தம் (காங்.,): சில வார்டுகளில் பழைய பாதாள சாக்கடை திட்ட குழாய்கள் உள்ளன .அவை பயன்பாடு இல்லாமல் உள்ளது அவை அகற்றப்படுமா.
ஒப்பந்ததாரர்: பழைய குழாய்களை அகற்றும் பணி எங்களுக்கு ஒதுக்கப்படவில்லை. புதிய பாதாள சாக்கடை திட்டம் மட்டுமே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சாகுல் ஹமீது (தி.மு.க.,): திட்டம் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் முடிக்கவிட்டால் காலதாமத பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டுமா.
ஒப்பந்ததாரர்: காலதாமதம் ஏற்பட்டால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டாம். பணிகளை விரைந்து முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
பத்மினி முருகானந்தம் (காங்.,): பாதாள சாக்கடை திட்டம் நடைபெறும் போது சாலை சேதமடைந்தால் எவ்வாறு சரி செய்யப்படும்.
ஓப்பந்ததாரர்: சாலைகள் உடனுக்குடன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். தொட்டிகள் தோண்டப்படும் இடங்களில் மட்டும் இரு நாட்கள் குழிகள் மூடப்படாமல் இருக்கும். அதையும் சரியான நேரத்தில் மூடப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.