/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடைக்கானலில் வானில் பறந்து இயற்கை அழகை ரசிக்க ஏற்பாடு
/
கொடைக்கானலில் வானில் பறந்து இயற்கை அழகை ரசிக்க ஏற்பாடு
கொடைக்கானலில் வானில் பறந்து இயற்கை அழகை ரசிக்க ஏற்பாடு
கொடைக்கானலில் வானில் பறந்து இயற்கை அழகை ரசிக்க ஏற்பாடு
ADDED : மே 15, 2025 02:57 AM
திண்டுக்கல்:சுற்றுலாப் பயணிகளை மகிழ்விக்க பாராசூட், பாரா சைலிங் என வானில் பறந்தவாறு இயற்கை அழகை ரசிக்கும் வான் சாகச நிகழ்ச்சி கொடைக்கானலில் நாளை( மே 16-) முதல் 4 நாட்கள் நடக்கிறது.
கோடை காலத்தை முன்னிட்டு குளுகுளு சீசனை அனுபவிக்க கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர். அவர்களை மகிழ்விக்க திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத் துறை, தனியார் நிறுவனத்துடன் இணைந்து பாராசூட், பாரா சைலிங் நிகழ்ச்சியை நாளை முதல் மே 19 வரை 4 நாட்கள் கொடைக்கானல் மூஞ்சிக்கல்லில் நடத்த உள்ளது.
காலை 9:00 மணி முதல் மாலை 5 :00மணி வரை வானில் பறந்தவாறு கொடைக்கானலின் இயற்கை அழகை சுற்றுலா பயணிகள் ரசிக்கலாம். இதற்கான கட்டணம் ரூ.200 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 15 முதல் 60 வயது வரை உள்ள இரு பாலரும் பங்கேற்கலாம்.