ADDED : ஆக 04, 2025 04:29 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: அய்யலூர் கருஞ்சின்னானூரில் பகவதியம்மன், பெரியகாண்டியம்மன் கோயில் திருவிழா நடந்தது. அரசியல் பிரமுகர்களை திருவிழாவிற்கு அழைத்து வரக்கூடாது என ஊர் கூட்டத்தில் முடிவு எடுத்திருந்த நிலையில், கடைசி நாள் கலைநிகழ்ச்சியில் தி.மு.க., நகர விவசாய அணி துணை அமைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி என்பவர், வெளியூர் கட்சி முக்கிய பிரமுகர்களை வரவழைத்து கவுரவப்படுத்தினார்.
இதை கண்டித்து சிலர் தி.மு.க., பிரமுகர்களின் வாகனங்களை மறித்து தகராறு செய்தனர். சிறிது நேரத்தில் கிருஷ்ணமூர்த்தியின் மாட்டுக்கொட்டகை, வைக்கோல் படப்பு தீப்பற்றி எரிந்தது. வேடசந்தூர் தீயணைப்புத்துறையினர் அணைத்தனர். கருச்சின்னானூரை சேர்ந்த வீரமலை, சங்கன், ஜெயக்குமார், கருப்பையா உள்ளிட்ட 21 பேர் மீது வடமதுரை போலீசார் வழக்கு பதிந்தனர்.