/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல்லில் 'சாம்பல் புதன்'
/
திண்டுக்கல்லில் 'சாம்பல் புதன்'
ADDED : பிப் 19, 2026 05:57 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் மறை மாவட்டம் நிர்வகிக்கும் சர்ச்களில் கிறிஸ்தவர்களின் புனித தவக்காலம் சாம்பல் புதனுடன் துவங்கியது.
ஏப்.5ல் கொண்டாடப்படும் ஈஸ்டர் பண்டிகைக்கு முன்பாக திண்டுக்கல் மறை மாவட்டத்திற்கு கட்டுப்பட்ட புனித வளனார் சர்ச், மேட்டுபட்டி புனித வியாகுல அன்னை சர்ச் உள்ளிட்ட ரோமன் கத்தோலிக்க சர்ச்களில் கிறிஸ்துவர்களின் புனித தவக்கால துவக்கமான 'சாம்பல் புதன்' நடந்தது. இத்தவக்காலம் சாம்பல் புதனான நேற்று (பிப்.19) துவங்கியது.
இதை தொடர்ந்து ஏப்.3 ல்புனித வெள்ளி , ஏப்.5ல் ஈஸ்டர் பண்டிகையுடன் 40 நாட்கள் நடைபெறும். இந்நாட்களில் கிறிஸ்தவர்கள் நோன்பு, ஜெபம், தியான வழிபாடுகளில் ஈடுபடுவர். நேற்று திண்டுக்கல் புனித வளனார் சர்ச்சில் மறை மாவட்டப் பொருளாளர் சாம்சன் தலைமையில் பாதிரியார் இஞ்ஞாசி சிறப்பு திருப்பலி நடத்தி தவக்காலம் மேற்கொள்ளும் கிறிஸ்தவர்களின் நெற்றியில் திருநீற்றுச் சாம்பலிட்டு புனித தவக்காலத்தை துவக்கி வைத்தனர். திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

