sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், மார்ச் 11, 2026 ,மாசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 சட்டசபை தேர்தலில் ஒலிக்கும் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் குமுறல்

/

 சட்டசபை தேர்தலில் ஒலிக்கும் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் குமுறல்

 சட்டசபை தேர்தலில் ஒலிக்கும் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் குமுறல்

 சட்டசபை தேர்தலில் ஒலிக்கும் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் குமுறல்


ADDED : பிப் 19, 2026 05:57 AM

Google News

ADDED : பிப் 19, 2026 05:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: ''அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஏமாற்றுவதற்காகவே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்' அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இது மாநிலம் முழுவதும் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கத்தினர்களிடையே அரசின் மீது அதிருப்தி ஏற்பட்டுள்ளது. அதன் வெளிப்பாடு சட்டசபை தேர்தலில் ஒலிக்கும் '' என இயக்கத்தின் மாநிலத் தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் தெரிவித்துள்ளார்.

திண்டுக்கல்லில் அவர் கூறியதாவது:

தமிழக சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால நிதிநிலை அறிக்கையில் தி.மு.க.,வின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவது உள்ளிட்ட எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்பட வில்லை. புதிய ஓய்வூதியத் திட்டத்தில் 23 ஆண்டுகளாக பிடித்தம் செய்யப்பட்ட ரூ.1 லட்சம் கோடி பற்றி எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. ஆனால் உறுதி அளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்திற்கு ரூ.11 ஆயிரம் கோடி ஒதுக்கீடு என்பது அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஏமாற்றும் செயல் தான்.

2026 ஜன.,3ல் தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு 2026 ஜன.,9ல் அன்று அரசாணை வெளியிடப்பட்டு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்த விதிமுறைகளையோ, தெளிவுரைகளோ இன்று வரை வெளியிடப்படவில்லை. தேர்தல் அறிவிப்புக்கு சில நாட்களே உள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை ஏமாற்றுவதற்காகவே உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.

தி.மு.க., அரசில் 2020- 2021 நிதியாண்டு முதல் தற்போது வெளியான இடைக்கான நிதிநிலை அறிக்கை வெளியானது வரை தமிழகத்தின் கடன் ரூ.52.45 லட்சம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. நிலைமை இப்படி இருக்க உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்த அரசு எவ்வாறு முன் ஏற்பாடுகளை செய்துள்ளது என நிதித்துறை செயலாளர், நிதி அமைச்சர் வெளிப்படையாக தெரிவிக்கவில்லை.

இதனால் மாநிலம் முழுவதும் எங்கள் இயக்கத்தில் உள்ள உறுப்பினர்கள் அரசின் மீது அதிருப்தியில் உள்ளனர். அதன் வெளிப்பாடு சட்டசபை தேர்தலில் ஒலிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us