தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/அஸ்வகந்தா சாகுபடி பயிற்சி

அஸ்வகந்தா சாகுபடி பயிற்சி

அஸ்வகந்தா சாகுபடி பயிற்சி


UPDATED : அக் 10, 2026 03:47 PM

ADDED : அக் 10, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 10, 2026 03:47 PM ADDED : அக் 10, 2026 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்: வேடசந்துார் வணிக வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் வணிக மூலிகை பயிரான அஸ்வகந்தா பயிர் சாகுபடி, கூடுதல் உற்பத்தி, ஏற்றுமதி வாய்ப்பு, சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி முகாம் நடந்தது.

நிலைய தலைவர், பயிர் பெருக்கவியல் விஞ்ஞானி மணிவேல் தலைமை வகித்தார். தொழில்நுட்ப உதவியாளர் கார்த்திக் வரவேற்றார். உளவியல் துறை விஞ்ஞானி குமரேசன் அஸ்வகந்தா பயிரின் உழவியல், நவீன சாகுபடி தொழில்நுட்ப முறைகள் குறித்து விளக்கினார். நுாற்புழுவியல் துறை விஞ்ஞானி வெங்கடேசன் பயிர் பாதுகாப்பு, நுாற்புழு மேலாண்மை தொழில்நுட்பங்கள் குறித்து விளக்கினார். ஆராய்ச்சியாளர்கள், விவசாயிகள் பங்கேற்ற கலந்துரையாடல் நடந்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து விவசாயிகள், தொழில் முனைவோர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us