UPDATED : அக் 10, 2026 03:17 PM
ADDED : அக் 10, 2026 03:14 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே 17 வயது சிறுமியை திருமணம் செய்து கொடுமைப்படுத்திய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ரெட்டியார்சத்திரத்தை சேர்ந்தவர் கணேசமூர்த்தி 25. இவர் ஒட்டன்சத்திரம் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமியை காதலிப்பதாக ஆசைவார்த்தை கூறி திருமணம் செய்தார். பின்னர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, அவரை துன்புறுத்தியதாக ஒட்டன்சத்திரம் மகளிர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இன்ஸ்பெக்டர் புவனேஸ்வரி, எஸ்.ஐ., கவுசல்யா உள்ளிட்ட போலீசார் நடத்திய விசாரணையில் கொடுமைப்படுத்தியது உறுதியானது. தொடர்ந்து கணேசமூர்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரிக்கின்றனர்.
