sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

குப்பையை கொட்டி எரிப்பதால் உருவாகும் புகையால் மூச்சு திணறல்

/

குப்பையை கொட்டி எரிப்பதால் உருவாகும் புகையால் மூச்சு திணறல்

குப்பையை கொட்டி எரிப்பதால் உருவாகும் புகையால் மூச்சு திணறல்

குப்பையை கொட்டி எரிப்பதால் உருவாகும் புகையால் மூச்சு திணறல்


ADDED : செப் 25, 2024 05:10 AM

Google News

ADDED : செப் 25, 2024 05:10 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வாய்க்கால் அருகே வெங்காய கழிவு : திண்டுக்கல் - கரூர் ரோட்டில் கல்வார்பட்டி அடுத்துள்ள ரங்கமலை வாய்க்கால் அருகே வெங்காய கழிவு மூடைகளை கொட்டி செல்கின்றனர். இதனால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது .ரோட்டில் கொட்டுவதை தடுக்க வேண்டும்.

-எல்.பூவரசன், வேடசந்துார்.

............--------

கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேடு : திண்டுக்கல் மெயின் ரோட்டில் ஓட்டல் கழிவுகள் வெளியேறுவதால் கழிவுநீர் தேங்கி அப்பகுதி முழுவதும் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாகவும் உள்ளது. கழிவுநீர் வெளியே வராமல் தடுக்க வேண்டும்.

-பூ.பாலசுப்பிரமணியன், திண்டுக்கல்.

.................-------

சேதமடைந்த மின்கம்பம் : திண்டுக்கல் அறிவுத்திருக்கோயில் அருகே ரோஜா நகரில் மின்கம்பம் சேதமடைந்து பல நாட்களாக அப்படியே விடப்பட்டுள்ளது. மரத்தில் செடிகள் படர்ந்துள்ளதால் மழை நேரங்கள் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.

---சவுந்தரராஜன், ரோஜா நகர்.

..............--------

சேதமடைந்த ரோடு : ஒட்டன்சத்திரம் பழநி ரோட்டில் இருந்து அரசப்பபிள்ளைபடடி செல்லும் ரோட்டில் பள்ளம் உள்ளதால் வாகனங்களை இயக்க சிரமமாக உள்ளது. இதனை சீரமைக்க துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -

-பழனிச்சாமி, ஒட்டன்சத்திரம்.

..............--------குழாய் உடைந்து வீணாகும் தண்ணீர் : நத்தம் அருகே வேலம்பட்டி செல்லும் சாலையில் குழாய் உடைந்து தண்ணீர் சாலையில் செல்கிறது. இதனால் சுகாதார பிரச்னை ஏற்படுவதுடன் வாகன ஓட்டிகளும் பாதிக்கும் நிலை உள்ளது. துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-செல்வராஜ், நத்தம்.

...............-----

மரத்தால் விபத்து அபாயம் : திண்டுக்கல் - திருச்சி ரோடு சீலப்பாடி சந்திப்பு அருகே பட்டுப்போன மரத்தால் விபத்து அபாயம் உள்ளது. போக்குவரத்து அதிகம் உள்ள இப்பகுதியில் மரம் உள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது .மரத்தை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-குமார், திண்டுக்கல்.

................---------

புகையால் பாதிப்பு : திண்டுக்கல் லாரி பேட்டையில் குப்பையை கொட்டி தீவைப்பதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது. அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் ஏற்படுகிறது. அருகில் குழந்தைகள் மையம் உள்ளதால் குப்பையை எரிக்காமல் அகற்ற வேண்டும்.

-மனோஜ்குமார், திண்டுக்கல்.






      Dinamalar
      Follow us