/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
அனுமதியின்றி குவாரிகள் நடத்த முடியாது சொல்கிறார் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர்
/
அனுமதியின்றி குவாரிகள் நடத்த முடியாது சொல்கிறார் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர்
அனுமதியின்றி குவாரிகள் நடத்த முடியாது சொல்கிறார் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர்
அனுமதியின்றி குவாரிகள் நடத்த முடியாது சொல்கிறார் சட்டசபை பொது நிறுவனங்கள் குழு தலைவர்
ADDED : ஜூன் 13, 2025 03:00 AM

திண்டுக்கல்: -''அனுமதியில்லாமல் குவாரிகள் நடத்த முடியாது.இதற்கு அரசு அதற்கு ஒருபோதும் அனுமதிக்காது'' என சட்டசபை பேரவை பொதுநிறுவனங்கள் குழு தலைவர் நந்தகுமார் கூறினார்.
தமிழக சட்டசபை பேரவை பொதுநிறுவனங்கள்குழுவினர் தலைவர் எம்.எல்.ஏ., நந்தகுமார் தலைமையில், உறுப்பினர்கள் உடுமலை ராதாகிருஷ்ணன், கடம்பூர் ராஜூ, கிரி, கோவிந்தசாமி, நாகைமாலி, விஜயபாஸ்கர், வேலு ஆகியோர் 2 நாட்கள் ஆய்வுப்பயணமாக திண்டுக்கல் மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். நேற்று காலை பழநியில் புதிதாக கட்டப்பட்டு வரும் ஆதிதிராவிடர் கல்லூரி மாணவர்கள் விடுதி, பழநி துணை மின் நிலையத்தில் புதிய மின் தொடர் அமைத்தல் பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.ஆய்வின்போது முதன்மை செயலாளர் சீனிவாசன், டி.ஆர்.ஓ., ஜெயபாரதி உடனிருந்தனர்.
இதை தொடர்ந்து கலெக்டர் சரவணன் முன்னிலையில் அனைத்துதுறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதன் பின் குழு தலைவர் நந்தகுமார் கூறியதாவது : மாவட்டத்தில் நடக்ககூடிய வளர்ச்சி பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளோம். 2 ஆயிரம் புதிய பஸ்கள் வாங்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும் 3 ஆயிரம் பஸ்களுக்கு டெண்டர் விடப்பட்டு புதிய பஸ்கள் வந்துவிடும். பழுதானவை மாற்றப்படும். திண்டுக்கல் மாவட்டத்தில் கடத்தல் மணல் அதிகரித்துள்ளது குறித்து தற்போது தான் கவனத்திற்கு வந்துள்ளது. கலெக்டர் வாயிலாக ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்துகிறோம். குவாரிகளுக்கு பாஸ் நடைமுறை கொண்டு வரப்பட்டு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அனுமதியில்லாமல் குவாரிகள் நடத்த முடியாது, அரசு இதற்கு ஒருபோதும் அனுமதிக்காது என்றார்.
டாக்டர் பேரு என்னங்க
ஆய்வுக்கூட்டம் தொடங்கியபோது குழு தலைவர் நந்தகுமார் குழு உறுப்பினர்கள் ஒவ்வொருவரின் பெயராக கூறிவந்தார். அப்போது முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் பெயரை கூற ஏங்க டாக்டர் பேரு என்னங்க என கேட்டு பெயரை கூறினார். அப்போது அலைபேசியில் பேசிக்கொண்டிருந்த முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் ஷாக் ஆனது போல் பார்த்தார். கூட்டத்தில் பேசிய தலைவர் நந்தகுமார், அனைத்து துறை அலுவலர்களும் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் அளியுங்கள். இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும். இறைவன் கொடுத்த பணி மக்களுக்கு சேவை செய்வதென்பது. சேவையை சரியாக செய்யுங்கள். இறைவன் நம்மை பாத்துப்பார் என்றார்.