/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செங்கல் சூளை தொழிலாளர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது
/
செங்கல் சூளை தொழிலாளர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது
செங்கல் சூளை தொழிலாளர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது
செங்கல் சூளை தொழிலாளர்கள் மீது தாக்குதல்: இருவர் கைது
ADDED : பிப் 12, 2024 11:31 PM

கீரனுார்: திண்டுக்கல் மாவட்டம் பழநி நரிகல்பட்டி அருகே செயல்பட்டு வரும் செங்கல் சூளையில் தொழிலாளர்கள் தாக்கப்பட்டு காயங்களுடன் பேசும் வீடியோ பரவியது. இதில் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி மேலச்சேரியைச் சேர்ந்த பார்த்திபன் 21, மனைவி ரேணுகா 19, கண்ணீருடன் செங்கல் சூளையில் வேலைக்கு அழைத்து வந்து தங்களை தாக்குவதாக கூறி உள்ளனர்.
இவர்கள் நரிக்கல்பட்டி தனியார் செங்கல் சூளையில் ஐந்து மாதங்களுக்கு முன் வேலைக்கு சேர்ந்துள்ளனர். அங்கேயே தங்கி வேலை பார்க்கின்றனர். உறவினர்கள் சிலரும் இவர்களுடன் பணிபுரிந்துள்ளனர். நேற்று முன்தினம் இவர்கள் மீது தாக்குதல் நடந்துள்ளது. காயமடைந்த இவர்களை பழநி அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.
பழநி ஆர்.டி.ஓ., சரவணன் தலைமையில் வருவாய்த் துறையினர் கொத்தடிமைகளாக யாரும் பணிபுரிகிறார்களா என விசாரணை நடத்தினர். இதுபோல் தொழிலாளர் நலத்துறை அலுவலர்களும் விசாரணை நடத்தினர். இதனிடையே இவர்களை தாக்கிய செங்கல் சூளையில் பணி புரிந்த அஜீத் 24, 16 வயது சிறுவனை சாமிநாதபுரம் போலீசார் கைது செய்தனர்.