ADDED : ஜன 30, 2026 06:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: ஆறாவது ஊதியக்குழு பரிந்துரைகளை உறுதி செய்து, அதற்கு இணையான ஊதியத்தை ஏழாவது ஊதியக்குழு நடைமுறையில் வழங்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி , திண்டுக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு அரசு வேளாண்மைப் பட்டதாரிகள் சங்கம், தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பின் சார்பில் கறுப்பு பேட்ஜ் அணிந்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வேளாண் பட்டதாரிகள் சங்க மாவட்ட தலைவர் சந்திரமோகன் தலைமை வகித்தார். முன்னாள் மாவட்ட தலைவர் ராமராஜ் பேசினார்.
ஊரக வளர்ச்சித்துறை பொறியாளர் சங்க மாநில இணைச் செயலாளர் பாலசுப்பிரமணியன், தமிழ்நாடு பொறியாளர் கூட்டமைப்பின் மதுரை மண்டல பொறுப்பாளர் அழகர்சாமி பங்கேற்றனர்.

