/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வழக்கறிஞர் மீது தாக்கு; இருவர் கைது
/
வழக்கறிஞர் மீது தாக்கு; இருவர் கைது
ADDED : பிப் 20, 2025 05:44 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரத்தில் வழக்கறிஞர்கள் போராடி வரும் நிலையில் திமன்றத்தில் பீஸ் கமிட்டி கூட்டம் நடந்த நிலையில் இருவர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் சுப்ராம்பட்டரையை சேர்ந்த வழக்கறிஞர் உதயகுமார். இவரை அமைச்சர் பெரியசாமி பாதுகாவலரான போலீஸ் ரவி, தி.மு.க.,கவுன்சிலர் சுபாஷ் மற்றும் சிலர் தாக்கினர். இதையறிந்த திண்டுக்கல் வழக்கறிஞர் சங்கத்தினர் ரோடு மறியல், போலீஸ் ஸ்டேஷன் முற்றுகை, நீதிமன்ற புறக்கணிப்பு என பல கட்ட போராட்த்தில் ஈடுபட்டனர். பிப். 21 ல் அமைச்சர் பெரியசாமி எதிராக போராட்டம் நடத்த உள்ளதாகவும் அறிவித்திருந்தனர். இதனிடையே நேற்று காலை முதல் போலீசாரை நீதிமன்றத்திற்குள் வர விடாமல் தடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மாவட்ட முதன்மை நீதிபதி முத்துசாரதா, தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கனகராஜ், எஸ்.பி.,பிரதீப், தலைமை குற்றவியல் வழக்கறிஞர் மகேந்திரன், திண்டுக்கல் வழக்கறிஞர் சங்க தலைவர் குமரேசன் உள்ளிட்டோர் பங்கேற்ற பீஸ் கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டது. இருதரப்பினரிடமும் முதன்மை நீதிபதி முத்துசாரதா விசாரணை நடத்தினார். எஸ்.பி.,பிரதீப் மாலைக்குள் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்தார். இதை தொடர்ந்து வழக்கில் தொடர்புடைய திண்டுக்கல் சென்னநாயக்கன் பட்டியைச் சேர்ந்த நாகராஜன் 29, கணபதி 26, இருவரையும் போலீசார் கைது செய்தனர்.