/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பணத்தை தவறவிட்ட ஐயப்ப பக்தர் மீட்டு கொடுத்த ஆட்டோ டிரைவர்கள்
/
பணத்தை தவறவிட்ட ஐயப்ப பக்தர் மீட்டு கொடுத்த ஆட்டோ டிரைவர்கள்
பணத்தை தவறவிட்ட ஐயப்ப பக்தர் மீட்டு கொடுத்த ஆட்டோ டிரைவர்கள்
பணத்தை தவறவிட்ட ஐயப்ப பக்தர் மீட்டு கொடுத்த ஆட்டோ டிரைவர்கள்
ADDED : டிச 26, 2025 05:46 AM
பழநி: பழநி கோசாலை இலவச பார்க்கிங்கில் பணத்தை தவறவிட்ட ஐயப்ப பக்தரை கண்டறிந்து பணத்தை திருப்பித் தந்த ஆட்டோ டிரைவர்களை போலீசார் பாராட்டினர்.
பழநி முருகன் கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை புரிகின்றனர். தற்போது ஐயப்ப பக்தர்களின் வருகை அதிகரித்து உள்ளது. தைப்பூச பாதையாத்திரை பக்தர்கள் வருகையும் அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம் (டிச. 24) நாமக்கல் மாவட்டம் ரெட்டிபட்டியைச் சேர்ந்த மணிகண்டன் 31, ரூ .15 ஆயிரத்துடன் கூடிய பையை கோசாலை பார்க்கிங்கில் தவறவிட்டார். பழநி கோயிலுக்கு சென்று விட்டு திரும்பிய போது பணம் தவற விட்டது தெரிந்தது.
இதனிடையே கோசாலை பார்க்கிங்கில் இருந்த ஆட்டோ டிரைவர்கள் சங்கர், மயில்சாமி ஆகியோர் பணத்தை பழநி அடிவாரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர். போலீசார் பையை ஆய்வு செய்ததில் முகவரியை தொடர்பு கொண்டு மணிகண்டனை அழைத்து பணத்தை கொடுத்தனர். பணத்தை ஒப்படைத்த ஆட்டோ டிரைவர்களை போலீசார் பாராட்டினர்.