/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தமிழ் கற்க காந்திகிராமம் வந்த வாரணாசி மாணவர்கள்
/
தமிழ் கற்க காந்திகிராமம் வந்த வாரணாசி மாணவர்கள்
ADDED : டிச 25, 2025 06:30 AM

சின்னாளபட்டி: உத்தரப்பிரதேச மாநில வாரணாசி பல்கலை மாணவர்கள் தமிழ் கற்பதற்காக காந்திகிராமம் பல்கலைக்கு வந்துள்ளதாக துணைவேந்தர் பஞ்சநதம் கூறினார்.
அவரது அறிக்கை: தமிழ் கற்க வேண்டும் என்ற குறிக்கோளுடன் உத்தரப்பிரதேச மாணவர்கள் காந்திகிராம பல்கலைக்கு வந்துள்ளனர். இன்றைய இளைஞர்கள் அனைவரும் தேசத்தின் கலாசாரத்தையும், விழுமியங்களையும், மொழிகளில் நவீன வளர்ச்சிகளையும் புரிந்து கொள்வது அவசியமாகும். பாரதியார் காசியில் நான்கு ஆண்டுகள் தங்கி இருந்து சமஸ்கிருதம் கற்றார். காசியின் சிறப்புகளை பாடினார். கட்டுரைகளாக எழுதி மக்களுக்கு வெளிப்படுத்தினார். காசி மாநகருக்கும் தமிழகத்திற்கும் நீண்ட கால தொடர்பு இருந்து வருகிறது.
வாரணாசியில் இருந்து வந்துள்ள மாணவர்களுக்கு தமிழகத்தில் உள்ள வரலாற்று சின்னங்கள், கல்வி நிலையங்கள், பாரம்பரிய கோயில்களை காண்பதற்கும், செம்மொழியான இனிமை தமிழ் மொழியை கற்பதற்கும் நல்லதொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.
தமிழ் கற்பித்தலுடன் சிறப்பு சொற்பொழிவுகள், கலந்துரையாடல், பாரம்பரிய சுற்றுலா போன்றவற்றிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

