/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆட்டோ கவிழ்ந்து விபத்து-: 6 பேர் காயம்
/
ஆட்டோ கவிழ்ந்து விபத்து-: 6 பேர் காயம்
ADDED : ஜூலை 14, 2025 12:39 AM

நத்தம்: நத்தம் அருகே ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் 6 பேர் காயம் அடைந்தனர்.
மதுரை திருப்பாலையை சேர்ந்தவர் லோகேஸ்வரன் 39. இவர் தனது உறவினர்களுடன் நத்தம் அருகே கோபால்பட்டி வந்துவிட்டு ஆட்டோவில் திரும்பினார். ஆட்டோவை சக்கிலியான் கொடையை சேர்ந்த ஆண்டிச்சாமி 30 ஓட்டினார்.
நத்தம் அருகே உலுப்பகுடி பகுதியில் சென்று கொண்டிருந்த போது எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
லோகேஸ்வரன் 39, சிறுமி மீனாட்சி 3, மதுரை- கீரைத்துறை சேர்ந்த விஜயகுமார் 45, ஆணையூரை சேர்ந்த சாந்தி 60, சென்னையை சேர்ந்த அஜீத்குமார் 25, மதுரையை சேர்ந்த குணசேகரன் 49, ஆகியோர் காயமடைந்தனர். இதில் சாந்தி மற்றும் அஜித்குமார் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். நத்தம் போலீசார் விசாரிக்கின்றனர்.

