/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஒட்டன்சத்திரத்தில் தானியங்கி நடைமேடை: அமைச்சர் ஆய்வு
/
ஒட்டன்சத்திரத்தில் தானியங்கி நடைமேடை: அமைச்சர் ஆய்வு
ஒட்டன்சத்திரத்தில் தானியங்கி நடைமேடை: அமைச்சர் ஆய்வு
ஒட்டன்சத்திரத்தில் தானியங்கி நடைமேடை: அமைச்சர் ஆய்வு
ADDED : அக் 11, 2024 07:28 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரத்தில் அமைய உள்ள தானியங்கி நடைமேடை, நவீன வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் அரசு மருத்துவமனை ஆகியவற்றை பொதுப்பணித்துறை நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு ஆய்வு மேற்கொண்டார்.
ஒட்டன்சத்திரம் பஸ் ஸ்டாண்ட் அருகே பழநி- திண்டுக்கல் ரோட்டை பொதுமக்கள் எளிதில் கடந்து செல்லும் வகையில் ரூ.14 கோடி மதிப்பீட்டில் தானியங்கி நடைமேடை அமைய உள்ள இடம், ரூ.20 கோடியில் இரண்டு அறுவை அரங்கங்கள், லிப்ட் வசதி, 50 படுக்கை வசதிகளுடன் கட்டப்பட்டு வரும் நவீன அரசு மருத்துவமனையை அமைச்சர் வேலு ஆய்வு செய்தார். உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, செந்தில்குமார் எம்.எல்.ஏ., கலெக்டர் பூங்கொடி, நெடுஞ்சாலை தலைமை பொறியாளர் சத்திய பிரகாஷ், டெக்னிக்கல் சிறப்பு அதிகாரி சந்திரசேகர், கண்காணிப்பு பொறியாளர் ரமேஷ், கோட்ட பொறியாளர் குமணன், உதவி கோட்ட பொறியாளர் விஜயகுமார், உதவி பொறியாளர்கள் முருக பிரகாஷ், இளவரசன் ,நகராட்சி தலைவர் திருமலைசாமி, துணைத்தலைவர் வெள்ளைச்சாமி, ஒன்றியத் தலைவர் அய்யம்மாள், ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், தங்கராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், பொதுக்குழு உறுப்பினர் பாலு, தொப்பம்பட்டி ஒன்றிய துணைத் தலைவர் தங்கம் உடன் இருந்தனர்.