UPDATED : நவ 13, 2026 08:43 PM
ADDED : நவ 13, 2026 08:40 PM
அ நிறம் | அளவு
நத்தம்: மதுரை வேளாண்மை கல்லுாரி, ஆராய்ச்சி நிலைய மாணவர்கள் ஊரக வேளாண் பணி அனுபவ திட்டத்தின் கீழ் ஊரக மதிப்பீட்டு விழிப்புணர்வு முகாமை நத்தம் அருகே ந.புதுப்பட்டி நடுமண்டலம் பகுதியில் நடத்தினர்.
இதில் சமூக பொருளாதார நிலை, இயற்கை வளங்கள், விவசாய சூழல், அடிப்படை வசதிகள், கிராம மக்களின் தேவைகள், பிரச்னைகள் குறித்து தகவல்களை சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
