UPDATED : நவ 14, 2026 05:04 PM
ADDED : நவ 14, 2026 05:04 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம்:
உலக சர்க்கரை நோய் விழிப்புணர்வு தினத்தை முன்னிட்டு ஒட்டன்சத்திரத்தில் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. டி.எஸ்.பி., கார்த்திகேயன், இன்ஸ்பெக்டர் லிங்கபாண்டியன் துவக்கி வைத்தனர்.
ஒட்டன்சத்திரம் நகரை சுற்றிலும் 5 கி.மீ., துாரத்திற்கு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பல்வேறு வயதினர் பங்கேற்றனர். வெற்றி பெற்றவர்களுக்கு டாக்டர்கள் ஆசைத்தம்பி, சக்திவேல், சரண்யா, ரகுராமன், பட்ஸ் பள்ளி தாளாளர் பொன்கார்த்திக் பரிசு, சான்றிதழ்களை வழங்கினர். ரோகேஷ், சுரேஷ்குமார் ஒருங்கிணைத்தனர்.
