UPDATED : நவ 13, 2026 10:57 PM
ADDED : நவ 13, 2026 10:52 PM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்:
திண்டுக்கல் அபிராமி அம்மன் கோயிலில் 500க்கும் மேற்பட்ட பெண்கள் கந்த சஷ்டி பாராயணம் செய்து உற்ஸவ மூர்த்தி ஆறுமுக பெருமானை வழிபாடு செய்தனர்.
இக்கோயிலில் நவ.,10ல் காப்புக் கட்டுதலுடன் துவங்கி கந்த சஷ்டி பெருவிழா நடந்து வருகிறது. தினமும் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், கேடயம், ஆட்டுக்கிடாய், மயில், குதிரை, சிம்ம வாகனம் உள்ளிட்டவைகளில் வள்ளி தெய்வானை சமேத ஆறுமுக பெருமான் வீதிஉலா நடந்து வருகிறது.
விழாவின் நான்காம் நாளான நேற்று 500க்கும் மேற்பட்ட பெண்கள் கந்த சஷ்டி கவச பாராயணம் செய்து வழிபட்டனர். பிராமண சமாஜ குழுவினர், பக்தர்கள், கிரிவல குழுவை சேர்ந்த ஏராளமானோர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலர் சுரேஷ்கண்ணன் செய்திருந்தார்.
