நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி: பழநி வட்டார போக்குவரத்து துறை சார்பில் சாலை பாதுகாப்பு மாத விழா தொடங்கியது. அதன் முதல் கட்டமாக விழிப்புணர்வு ஊர்வலம் பழநி மயில் ரவுண்டானவிலிருந்து துவங்கியது.
டி.எஸ்.பி சுப்பையா துவங்கி வைத்தார். ஊர்வலம் ஆர்.எப் ரோடு வழியாக வந்தது. போக்குவரத்து விதிகள் குறித்து விழிப்புணர்வு பாதைகளை ஏந்தியப்படி ஊர்வலமாக வந்தனர்.
வட்டாரப் போக்குவரத்து அலுவலர் ஜெயகவுரி, போக்குவரத்து இன்ஸ்பெக்டர் மகேந்திரன் கலந்து கொண்டனர்.