ADDED : அக் 07, 2024 05:41 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
செம்பட்டி: சித்தையன்கோட்டை அழகர்நாயக்கன்பட்டியில், போலீசார் சார்பில் குற்றத்தடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமை வகித்தார். எஸ்.ஐ.,கணேசன் முன்னிலை வகித்தார். தடை செய்யப்பட்ட போதை பழக்கங்களை தடுப்பதில் பொதுமக்களின் ஒத்துழைப்பு, குழந்தை திருமணம், சாலை போக்குவரத்து விதிகள் கடைப்பிடித்தலின் அவசியம், குற்றங்களை கட்டுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது.
* சின்னாளபட்டியில் நடந்த கூட்டத்தில்,எஸ்.ஐ., கோமதி தலைமை வகித்தார். ஆன்லைன் மோசடிகள், போதை பொருட்கள் ஒழிப்பு, சைபர் குற்ற தடுப்பு, பாதுகாப்பு வழிமுறைகள், கண்காணிப்பு கேமரா பயன்பாட்டை அதிகரித்தல் பற்றி போலீசார் விளக்கினர்.
--

