ADDED : பிப் 07, 2025 03:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல், நிலக்கோட்டை சமூக வனச்சரகம், வன உயிரின குற்ற கட்டுப்பாட்டு பிரிவு மதுரை, சிறுமலை வனச்சரகம் சார்பில் திண்டுக்கல் கொடைரோடு ஜே.மெட்டூரில் வன உயிரினங்கள் பாதுகாப்பு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டது.
வனச்சரக அலுவலர் கிருஷ்ணகுமார் தலைமை வகித்தார். உதவி வன பாதுகாவலர் நிர்மலா, வனச்சரக அலுவலர்கள் அருண்குமார், சிவா, சதீஷ்குமார் பங்கேற்றனர்.