ADDED : செப் 28, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
ஒட்டன்சத்திரம், செப்.29-
ஒட்டன்சத்திரம் சக்தி மகளிர் கல்லுாரியில் முதலாம் ஆண்டு மாணவிகளுக்கு குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அவசரகால தொலைபேசி எண்கள், குழந்தைகளுக்கு ஏற்படும் குற்றங்கள், அதிலிருந்து மீண்டு வருவது குறித்து எடுத்துக் கூறப்பட்டது. தாளாளர் வேம்பணன், கல்லுாரி முதல்வர் தேன்மொழி, கலெக்டர் அலுவலக குழந்தை பாதுகாப்பு ஆலோசகர் பெரியதுரை ஆகியோர் பேசினர்.
