ADDED : செப் 28, 2026 06:01 PM
அ நிறம் | அளவு
கன்னிவாடி, செப்.29-
ரெட்டியார்சத்திரம், கன்னிவாடி பகுதியில் சில வாரங்களாக பகலில் அதிகரித்து வந்த வெப்பத்தின் தாக்கத்தால் மக்கள் அவதிப்பட்டனர். கடந்த இரு நாட்களாக மாலை நேரங்களில் கருமேகம் பரவலாக சூழ்ந்த போதும் மழை பெய்யவில்லை.
நேற்று மாலை முதல் அவ்வப்போது சாரல் மழை பெய்ய துவங்கியது. கன்னிவாடி, மாங்கரை, கசவனம்பட்டி, காமாட்சிபுரம், கதிரனம்பட்டி பகுதியில் சாரல் தொடர்ந்தது. வெப்பத்தால் தவித்த மக்களுக்கு இம்மழை ஆறுதலாக அமைந்தது.-
