ADDED : நவ 11, 2026 08:38 PM
அ நிறம் | அளவு
வேடசந்துார்: அய்யர்மடம் தனியார் நுாற்பாலையில் பெண் தொழிலாளர்களுக்கான உள்ளக குழு தொடர்பான விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. அமைதி அறக்கட்டளை தலைவர் ரூபபாலன் தலைமை வகித்தார். மேலாளர் சீனிவாசன் முன்னிலை வகித்தார். சமூக நலன் பயிற்சி அலுவலர் பவித்ரா விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார்.
மனநலம், செயல்பாட்டுடன் கூடிய உடல்நலம், புகார் எழுதும் வழிமுறைகள், புகாரை ஆன்லைனில் பதிவு செய்யும் முறைகள் குறித்து விளக்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ராஜேஸ்வரி நன்றி கூறினார்.
