ADDED : செப் 16, 2026 02:11 PM
அ நிறம் | அளவு
வத்தலக்குண்டு, செப்.17-
வத்தலக்குண்டு பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் குப்பையை தரம் பிரித்து வழங்குவது குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. செயல் அலுவலர் ஆஷாராணி பொதுமக்களிடம் கூறுகையில், ‘பேரூராட்சியில் தற்போது மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து வாங்கப்பட்டு அவற்றில் இருந்து உரம் தயாரித்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. அக்டோபர் முதல் குப்பைக்கழிவுகளை ஈரக்கழிவு, உலர் கழிவு, சானிட்டரி கழிவு, சிறப்பு கவன கழிவு என நான்கு வகையாக தரம் பிரித்து நாள்தோறும் வீடுகளுக்கு தேடி வரும் துாய்மை பணியாளர்களிடம் வழங்க வேண்டும்’ என்றார். தலைமை எழுத்தர் முருகேசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
