ADDED : செப் 16, 2026 02:21 PM
அ நிறம் | அளவு
கோபால்பட்டி, செப்.17-
கோபால்பட்டி காளியம்மன் கோயிலில் விநாயகர் சதுர்த்தி விழாவின் நிறைவாக உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. முன்னதாக காளியம்மன், விநாயகருக்கு 16 வகை திரவிய அபிஷேகம், சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தது. பின்னர் உலக நன்மை, மழை பொழிய வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது. ஏராளமான பெண்கள் பங்கேற்று வழிபட்டனர். பக்தர்களுக்கு அன்னதானம் நடந்தது.
