UPDATED : ஜூலை 16, 2026 05:50 PM
ADDED : ஜூலை 16, 2026 05:35 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:வடமதுரையில் டெங்கு ஒழிப்பு விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
ஊராட்சி அலுவலகத்தில் துவங்கி பேரூராட்சி அலுவலகத்தில் முடிந்தது. வட்டார மருத்துவ அலுவலர் நாகேந்திரன் தலைமை வகித்தார். சுகாதார மேற்பார்வையாளர் போரப்பன் முன்னிலை வகித்தார். பி.டி.ஓ., சீத்தாலட்சுமி, பேரூராட்சி தலைவர் நிருபாராணி கணேசன், செயல் அலுவலர்கள் வடமதுரை பத்மலதா, அய்யலுார் சூசை இன்ப ராஜேஷ், சுகாதார ஆய்வாளர்கள் பங்கேற்றனர்.
