UPDATED : ஜூலை 16, 2026 05:50 PM
ADDED : ஜூலை 16, 2026 05:35 PM
அ நிறம் | அளவு
வடமதுரை;வடமதுரையில் ஹிந்து மக்கள் கட்சி சார்பாக விநாயகர் சதுர்த்தி விழா ஆலோசனை கூட்டம் நடந்தது.
ஒன்றிய தலைவர் ஐயப்பன், செயலாளர் ராஜாராம் தலைமை வகித்தனர். மாவட்ட தலைவர் நாகராஜ் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் வினோத்குமார், இளைஞர் அணி செயலாளர்கள் வடிவேல், அய்யனார், நிர்வாகிகள் பங்கேற்றனர். இந்தாண்டு சதுர்த்தி விழாவிற்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.
