UPDATED : ஜூலை 30, 2026 08:54 PM
ADDED : ஜூலை 30, 2026 08:53 PM

அ நிறம் | அளவு
திண்டுக்கல்:போடிகாமன்வாடி வித்ய சிக் ஷா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சார்பில் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு ஊர்வலம் செம்பட்டியில் நடந்தது.
செம்பட்டி இன்ஸ்பெக்டர் சரவணன் விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். பள்ளியின் தாளாளர் முத்துக்குமார் ஊர்வலத்தை துவக்கி வைத்தார். முதல்வர் சுதா அனைவரையும் வரவேற்றார்.
செம்பட்டி போலீஸ் ஸடேஷனில் துவங்கிய ஊர்வலம் நகர் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் போலீஸ் ஸ்டேஷனில் நிறைவடைந்தது. ஊர்வலத்தில் பங்கேற்ற மாணவிகள் போதைப் பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திச்சென்றனர்.
