UPDATED : அக் 13, 2026 06:50 PM
ADDED : அக் 13, 2026 06:47 PM
அ நிறம் | அளவு
செந்துறை: செந்துறை அரசு மேல்நிலைப்பள்ளியின் என்.எஸ்.எஸ்., மாணவர்கள் பங்கேற்ற சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. தலைமையாசிரியர் தேவமனோகரி தலைமை வகித்து பேரணியை தொடங்கி வைத்தார். உதவி தலைமையாசிரியர் வாசுகி, நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ராஜாக்கிளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பள்ளியில் தொடங்கிய பேரணி மங்களப்பட்டி பிரிவு, சந்தைப்பேட்டை, பஸ் ஸ்டாண்ட் வழியாக சென்று மீண்டும் பள்ளியை வந்தடைந்தது. சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற்றனர்.
