ADDED : நவ 17, 2026 10:23 PM
அ நிறம் | அளவு
பழநி:
பழநி நகராட்சி சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. கமிஷனர் ராஜலட்சுமி தலைமை வகித்தார். ஊர்வலத்தை ஆர்.டி.ஓ., பிரியங்கா கொடியசைத்து துவங்கி வைத்தார்.
பழநியாண்டவர் கலை பண்பாட்டுக் கல்லுாரியில் துவங்கிய ஊர்வலம் திண்டுக்கல் ரோடு, காந்தி மார்க்கெட் ரோடு வழியாக பெரிய கடைவீதி பழைய நகராட்சி கட்டடம் அருகே நிறைவடைந்தது. ஊர்வலத்தில் கல்லுாரி மாணவர்கள், தாசில்தார் சஞ்சய்காந்தி, நகராட்சி சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார், நகரமைப்பு ஆய்வாளர் சந்திரா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
