UPDATED : நவ 17, 2026 08:30 PM
ADDED : நவ 17, 2026 08:26 PM
அ நிறம் | அளவு
பழநி: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் பழநி அரசு அலுவலகங்களில் தொடர் பிரசார இயக்கம், ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டக்கிளை தலைவர் நாகராஜன் தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், சாலைப் பணியாளர்களின் 41 மாத பணிநீக்கத்தை உயர்நீதிமன்ற உத்தரவின்படி பணிக்காலமாக முறைப்படுத்த வேண்டும். பல்வேறு அரசு துறைகளில் ஒப்பந்த பணியில் பணியாற்றி வரும் ஊழியர்களை காலவரை ஊதியதிற்கு கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 21 கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. மாநில செயலாளர் நீதிராஜா, மாவட்ட தலைவர் முபாரக் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
