UPDATED : செப் 26, 2026 05:40 PM
ADDED : செப் 26, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
வடமதுரை:கொம்பேறிபட்டியில் இசை நிறுவனம் சார்பில் மூலிகை வழி கால்நடை மருத்துவ விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.
திட்ட இயக்குனர் சுரேஷ்கண்ணா தலைமை வகித்தார். அண்டக்குளம் உழவர் உற்பத்தியாளர் நிறுவன இயக்குனர் ஜீவானந்தம் முன்னிலை வகித்தார். மகளிர் திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திகா வரவேற்றார்.
பெங்களூரு கால்நடை பல்கலை பேராசிரியர் புண்ணியமூர்த்தி கருத்தாளராக பங்கேற்று கால்நடைகளில் ஏற்படும் மடிநோய், வாய் சவ்வுப்புண், அடைப்பான், ஆட்டு கொள்ளை நோய், குடற்புழு பிரச்னை, உண்ணி, பேன், புற ஒட்டுண்ணிகள், சினைப் பிடிக்காமை, கருச்சிதைவு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு மூலிகைகள் மூலம் மருத்துவ தீர்வு முறைகளை விளக்கினார்.
