/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மழையால் ஆயக்குடி கோயில் மண்டபம் இடிந்து விழுந்தது
/
மழையால் ஆயக்குடி கோயில் மண்டபம் இடிந்து விழுந்தது
ADDED : அக் 29, 2024 06:54 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி: பழநி பழைய ஆயக்குடியில் தனியாருக்கு சொந்தமான அகோபிலேஸ்வர பெருமாள் கோயில் முன் மண்டபம் மழையால் இடிந்து விழுந்தது.
பழநி பழைய ஆயக்குடியில் 1352ல் ஆயக்குடி மன்னர் பெரிய ஓபள கொண்டம நாயக்கரால் அகோபிலேஸ்வர பெருமாள் கோயில் கட்டப்பட்டது. பரம்பரை அறங்காவலராக ஜெயந்தி ஸ்ரீதர் உள்ளார். பல்வேறு விழாக்கள் நடைபெற்று வருகின்றன. மழையால் முன்மண்டபம் இடிந்து விழுந்தது. மழை தொடர்வதால் சீரமைப்பு பணி துவங்குவதில் தொய்வு ஏற்பட்டுள்ளது. விரைவில் பணிகள் துவங்கும் என பொறுப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

