ADDED : மார் 08, 2024 01:48 AM
வடமதுரை: அய்யலுார் பேரூராட்சி கூட்டம் தலைவர் கருப்பன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் பாண்டீஸ்வரி முன்னிலை வகித்தார்.
இளநிலை உதவியாளர் அல்லிமுத்து வரவேற்றார். பேரூராட்சி சார்பில் புளிய மர மகசூல், உசிலந்தழை, சுண்டைக்காய், எருத்தழை, நாணல் தட்டை, குறுஞ்சா தழை, ஆவாரம்பட்டை, சீத்தா பழங்கள், பனை மர மகசூல், வாரந்திர மாட்டுச்சந்தை, ஆட்டோ, வேன், மினிலாரி, வேன் நிறுத்துமிடம் போன்றவற்றிற்கு ஏலம் நடந்த அங்கீகரிக்கப்பட்டது.
பேரூராட்சியின் 26 வணிக கடைகளுக்கான ஏல காலம் மார்ச் 31ல் முடிவடையும் நிலையில் மார்ச் 12ல் மறுஏலம் நடத்த அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே லோக்சபா தேர்தல் அறிவிப்பு முன்னதாக வெளியானால் ஏப்ரல் முதல் வாடகையில் 5 சதவிகிதம் உயர்த்தி வசூல் செய்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. எழுத்தர் மோகன் நன்றி கூறினார்.

