/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நிரம்பியது அய்யம்பாளையம் மருதாநதி அணை
/
நிரம்பியது அய்யம்பாளையம் மருதாநதி அணை
ADDED : டிச 10, 2025 06:06 AM

பட்டிவீரன்பட்டி: அய்யம்பாளையம் மருதாநதி அணை பகுதியில் கொட்டிய கனமழை காரணமாக அணையின் நீர்மட்டம் உயர்ந்து வந்த நிலையில் நேற்று நிரம்பியது.
72 அடி கொண்ட மருதாநதி அணையின் 10 நாட்களுக்கு முன்பு 69 அடியாக இருந்தது.
அணைக்கு சீரான நீர்வரத்து வந்த நிலையில் அணை 72 அடியை எட்டி நிரம்பியது . தற்போது அணைக்கு விநாடிக்கு 42 கன அடி வீதம் நீர் வருகிறது. அணை
இந்த அணை நீர் மூலமாக நிலக்கோட்டை, ஆத்தூர் தாலுகாக்களை சேர்ந்த 7 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
மேலும் பட்டிவீரன்பட்டி, அய்யம்பாளையம், சேவுகம்பட்டி போன்ற 3 பேரூராட்சி, சித்தரேவு, அய்யன்கோட்டை, தேவரப்பன்பட்டி போன்ற 3 ஊராட்சிகளுக்கும் குடிநீர் வினியோகம் நடக்கிறது.
பொதுப்பணித் துறையினர் கூறுகையில்,'அணைக்கு வரும் 42 கன அடி நீர் பிரதான வாய்க்கால் வழியாக திறந்து விடப்பட்டுள்ளது. தொடர்ந்து மழை பெய்து நீர்வரத்து அதிகரித்தால் முதல் போக சாகுபடிக்கு தண்ணீர் திறந்து விடப்படும்' என்றனர்.

