sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

உள்ளாட்சி, நெடுஞ்சாலை அலட்சியத்தால் ஐயப்ப பக்தர்கள் அவதி

/

உள்ளாட்சி, நெடுஞ்சாலை அலட்சியத்தால் ஐயப்ப பக்தர்கள் அவதி

உள்ளாட்சி, நெடுஞ்சாலை அலட்சியத்தால் ஐயப்ப பக்தர்கள் அவதி

உள்ளாட்சி, நெடுஞ்சாலை அலட்சியத்தால் ஐயப்ப பக்தர்கள் அவதி


ADDED : டிச 03, 2024 07:12 AM

Google News

ADDED : டிச 03, 2024 07:12 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

செம்பட்டி: உள்ளாட்சி அமைப்புகள், போலீஸ், நெடுஞ்சாலைத்துறை அலட்சியத்தால் திண்டுக்கல்- குமுளி ரோட்டில் ஐயப்ப பக்தர்கள் அவதிக்குள்ளாகும் அவலம் தொடர்கிறது.

திண்டுக்கல், தேனி மாவட்டங்களின் இணைப்பு சாலையாகவும்,தேசிய நெடுஞ்சாலை வசம் உள்ள போதும் திண்டுக்கல்- குமுளி வழித்தடத்தில் வாகன ஓட்டிகளுக்கான அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதில் கடும் தொய்வு நிலவுகிறது. மேம்பாட்டு பணிகளில் அதிகாரிகள் அலட்சியத்தால் குறுகலான பகுதிகள் ,போதிய எச்சரிக்கை அறிவிப்பு இல்லாத இடங்களில் அடுத்தடுத்து விபத்துக்கள், உயிர் பலிகள் அரங்கேறுவது வாடிக்கையாகி விட்டது.

இந்த ரோட்டில் சில வாரங்களாக ஐயப்ப பக்தர்களின் வருகை வெகுவாக அதிகரித்துள்ளது. சபரிமலை செல்லும் வாகனங்களின் போக்குவரத்து அதிகரித்தபோதும் இதற்கேற்ற முன் ஏற்பாடுகளை மேற்கொள்வதில் போலீஸ்,உள்ளாட்சி அமைப்புகள், நெடுஞ்சாலை துறையின் நடவடிக்கைகளில் பின்னடைவு உள்ளது.

இப்பிரச்னையால் ஐயப்ப பக்தர்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது தவிர சுகாதாரமற்ற குடிநீர், கூடுதல் விலைக்கு உணவு பொருட்கள் விற்பனை உள்ளிட்ட பிரச்னைகளும் ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட வெளியூர் பயணிகளையும் பாதிப்படைய செய்துள்ளன.

இத்தடத்தில் வாகன ஓட்டிகள் விபத்துக்குள்ளாவது தவிர்க்கும் வகையிலும், ஐயப்ப பக்தர்களுக்கான பாதுகாப்பான பயணம், அடிப்படை வசதிகளை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முடுக்கி விட மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.

ரோடு விரிவாக்கம் தேவை


கண்ணன்,சமூக ஆர்வலர் செம்பட்டி: சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மட்டுமின்றி முக்கிய சுற்றுலாத் தலமான கொடைக்கானல் செல்வதற்கும் பிற மாவட்டங்களில் இருந்து இத்தடத்தை பயன்படுத்தும் நிலை உள்ளது. வார இறுதி நாட்களில் இத்தடத்தில் கணிசமான அளவில் வாகன போக்குவரத்து இருக்கும்.

பெரும்பாலான இடங்களில் இதன் அகலம் மிக குறைவாக உள்ளது. குறுகிய திருப்பங்களும் விபத்து ஏற்படுத்தும் அபாயங்களும் தாராளமாக தொடர்கிறது.

இந்த ரோட்டை நான்கு வழிச்சாலையாக மாற்றுவதில் உள்ள நடைமுறை பிரச்னைகளை கலைந்து விரிவு படுத்தினால் மட்டுமே விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க முடியும்.

போலீஸ் நியமிக்கலாம்


அய்யாத்துரை ,ஹிந்து முன்னணி, சித்தையன்கோட்டை : இரவு, பகல் என எந் நேரமும் கணிசமான அளவில் வாகன போக்குவரத்து தொடர்ந்த போதும் இத்தடத்தில் வாகன ஓட்டிகளுக்கான ஓய்வு பகுதி, அவசரகால தொடர்பு எண்கள், மருத்துவம், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட பாதுகாப்பான பயணத்திற்கான அம்சங்கள் ஏற்படுத்துவதில் தற்போது வரை தொய்வு நீடிக்கிறது.

செம்பட்டி வத்தலகுண்டு செங்கட்டாம்பட்டி சாலைப்புதுார் சித்தையன் கோட்டை விளக்கு உள்ளிட்ட இடங்களில் கனராக இருசக்கர வாகனங்களை ரோட்டில் பெரும்பகுதியை மறைத்து நிறுத்துகின்றனர். போலீசார் இவற்றை கண்டு கொள்வதில்லை.

போலீஸ் உதவி மைய செயல்பாடு என்று காட்சி பொருளாக கிடக்கிறது. நெரிசல் மிகுந்த இடங்களில் சுழற்சி முறையில் போலீசாரை நியமித்தால் மட்டுமே நெரிசல், விபத்துகளை தவிர்க்க முடியும்.

சுகாதாரம் மோசம்


சோ.ராமு,ஒருங்கிணைப்பாளர், அச்சாணி தன்னார்வ அமைப்பு, செம்பட்டி: செம்பட்டி, வத்தலகுண்டு பஸ் ஸ்டாண்ட் நுாற்றுக்கணக்கான பயணிகள் வந்து சென்றபோதும், அடிப்படை வசதிகளை பெயரளவில் கூட இல்லை.

குறுக்கும் நெடுக்குமாக விரும்பிய இடங்களில் வாகனங்களை நிறுத்திக் கொள்கின்றனர்.

இது தவிர வெளிநபர்களின் வாகனங்கள் கண்ட இடங்களில் நிறுத்துவதால் போக்குவரத்து நெரிசல், தகராறு ஏற்படுகிறது.

திண்டுக்கல் குமுளி வழித்தடத்தில் எந்த இடத்திலும் வாகன ஓட்டிகள், ஐயப்ப பக்தர்களுக்கு என பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. கழிப்பறை வசதிக்காக, வெளியூர் பயணிகள் அலைக்கழிப்புக்குள்ளாகும் அவல நிலை தொடர்கிறது.

பெரும்பாலான ஓட்டல்களில் விலைப்பட்டியல் இல்லாமல் கூடுதல் கட்டண வசூல் தாராளமாகிவிட்டது

-






      Dinamalar
      Follow us