/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
/
பூக்குழி இறங்கிய ஐயப்ப பக்தர்கள்
ADDED : டிச 23, 2024 05:36 AM

சின்னாளபட்டி: திண்டுக்கல் பித்தளைப்பட்டியில் ஐயப்ப பக்தர்கள் குழுவினர், ஆண்டுதோறும் மாலையணிந்து சபரிமலை செல்கின்றனர். நேற்று 15ம் ஆண்டு பூக்குழி இறங்குதல் விழா நடத்தினர்.
நேற்று வரதராஜ பெருமாள் கோயில் மண்டபத்தில் அன்னதானம் நடந்தது.
பின்னர் மகா காளியம்மன் கோயில் முன்பு அக்னி குண்டம் வளர்க்கப்பட்டது.
பக்தர்கள் குழுவினர், கிராம கோவில்களில் ஊர்வலமாக வந்து அபிஷேக, ஆராதனைகள் நடத்தினர். சிறப்பு பூஜைகளுக்கு பின், வரிசையாக நின்றிருந்த பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். அன்னதானம் நடந்தது. நாளை இருமுடி கட்டுதலுடன் சபரிமலை யாத்திரை துவங்குகின்றனர்.