/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை
/
108 ஆம்புலன்சில் பிறந்த ஆண் குழந்தை
ADDED : மே 09, 2025 05:40 AM
சாணார்பட்டி: கோபால்பட்டி அருகே 108 ஆம்புலன்ஸில் சுகப்பிரசவத்தில் பிறந்த ஆண் குழந்தை. தாயையும் சேயையும் நலமுடன் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் பிரசவம் பார்த்தனர்.
நத்தம் அருகே ந.அய்யாபட்டியைச் சேர்ந்தவர் ரஞ்சித் குமார் மனைவி சுபலட்சுமி 24. இவருக்கு ஏற்கனவே இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது மூன்றாவதாக கர்ப்பமாக இருந்தார். அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து உலுப்பகுடி ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு, பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். ஆம்புலன்ஸ் கோபால்பட்டி செல்லும் வழியில் ஒத்தக்கடை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென பிரசவ வலி அதிகமாகியுள்ளது.
இதையடுத்து ஆம்புலன்ஸின் அவசர கால உதவியாளர் திருமலை அப்பெண்ணிற்கு பிரசவம் பார்த்தில், ஆண் குழந்தை பிறந்தது. தாயும் சேயும் நலமுடன் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.