/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பூப்பந்தாட்ட போட்டி : முதல் இடங்களை பிடித்த திண்டுக்கல், தேனி
/
பூப்பந்தாட்ட போட்டி : முதல் இடங்களை பிடித்த திண்டுக்கல், தேனி
பூப்பந்தாட்ட போட்டி : முதல் இடங்களை பிடித்த திண்டுக்கல், தேனி
பூப்பந்தாட்ட போட்டி : முதல் இடங்களை பிடித்த திண்டுக்கல், தேனி
ADDED : டிச 09, 2024 05:58 AM
திண்டுக்கல்: அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் திண்டுக்கல் எம்.வி எம்., மகளிர் கலைக்கல்லுாரி அணி வெற்றி பெற்றது.
திண்டுக்கல் தாமரைப்பாடி புனித அந்தோனியார் கலை,அறிவியல் கல்லுாரியில் 2 நாட்களாக அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகத்திற்கு உட்பட்ட 14 அணிகளுக்கு இடையேயான பூப்பந்தாட்ட போட்டிகள் நடந்தது.
இதில், திண்டுக்கல் எம்.வி.எம்., மகளிர் கலை,அறிவியல் கல்லுாரி அணி முதலிடம் பிடித்தது. 2ம் இடத்தை பழநி அருள்மிகு பழனியாண்டவர் கலை கல்லுாரி அணியும், 3ம் இடத்தை பெரியகுளம் ஜெயராஜ் அன்ன பாக்கியம் கலை கல்லுாரியும் , 4ம் இடத்தை தேனி நாடார் சரஸ்வதி கலை கல்லுாரி அணியும் பிடித்தது.
வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசு ,சான்றிதழ்களை தாமரைப்பாடி புனித அந்தோனியார் கலை,அறிவியல் கல்லுாரி செயலாளர் அருள் தேவி, முதல்வர் மேரி பிரமிளா சாந்தி, தமிழ்நாடு பூப்பந்தாட்ட கழக மாநில துணைத்தலைவர் சீனிவாசன், கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக உடற்கல்வித்துறை இயக்குனர் ராஜம் வழங்கினர்.
போட்டிகளுக்கான ஏற்பாடுகளை புனித அந்தோணியார் கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் சோபியா சகாயராணி ஏற்பாடு செய்தார். 10 மாணவிகள் கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலை., அணி சார்பாக காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருக்கும் அகில இந்திய பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான பூப்பந்தாட்ட சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்க உள்ளனர்.