sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

வளமான வாழ்வுக்கு வழி தரும் பூப்பந்தாட்டம்

/

வளமான வாழ்வுக்கு வழி தரும் பூப்பந்தாட்டம்

வளமான வாழ்வுக்கு வழி தரும் பூப்பந்தாட்டம்

வளமான வாழ்வுக்கு வழி தரும் பூப்பந்தாட்டம்


ADDED : ஜூலை 27, 2024 06:17 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: மாணவர்களுக்கு சுய ஒழுக்கம்,தன்னம்பிக்கை,கட்டுப்பாடு,மன தைரியம், பாராட்டு, வாழ்வின் உயரத்திற்கு செல்லுதல் போன்ற பல்வேறு பரிசுகளை அள்ளி தருகிறது விளையாட்டு . அப்படிப்பட்ட ஒரு சிறந்த விளையாட்டு தான் பூப்பந்தாட்டம்.தஞ்சாவூரில் உருவாகி பலரது வாழ்வுக்கும் வழியாட்டியாக அமைந்துள்ளது . இந்த விளையாட்டின் முக்கியத்துவத்தை மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரியில் மாநில அளவிலான பூப்பந்தாட்ட போட்டி நடந்தது. அதில் பங்கேற்றவர்கள் மனம் திறந்ததாவது...

......

மனதை திடப்படுத்தும்

ஆர்.எஸ்.கே.ரகுராம்,முதன்மை தலைவர்,பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரி ,திண்டுக்கல்: பூப்பந்தாட்ட விளையாட்டு என்பது மற்ற விளையாட்டுக்களை போல் அல்லாமல் அதை கற்றுகொள்பவர்களின் மன நிலையை உறுதிப்படுத்துகிறது. நம் உடல் மனம் இரண்டையும் கட்டுக்குள் கொண்டு வந்து நல்ல பண்புகளை கற்று தருகிறது. இதனால் பள்ளி,கல்லுாரி மாணவர்கள் ஏராளமானோர் இதை ஆர்வமாக விளையாடுகின்றனர். இதை உலகெங்கும் கொண்டு செல்ல வேண்டும்.

............

விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம்

விஜய்,இணை பதிவாளர்,பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரி ,திண்டுக்கல்: மாநில அளவிலான போட்டி தற்போது திண்டுக்கல் பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரியில் நடக்கிறது. இதில் 2000க்கு மேலானோர் பங்கேற்றுள்ளனர். 7 வகையான போட்டிகள் நடந்ததில் 10 வயது முதல் 70 வயது வரையிலான போட்டியாளர்கள் விளையாடினர். கல்லுாரி மாணவர்களும் அதிகளவில் பங்கேற்று விளையாடுவதால் நாங்களும் ஆர்வமாக போட்டிகளை நடத்துகிறோம். பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்னும் பல போட்டிகளை நடத்த இருக்கிறோம்.

..............

சகிப்பு தன்மை ஏற்படும்

சச்சிதானந்தம்,தேசிய நடுவர்,சென்னை:மாநில அளவிலான போட்டியில் 35 பெண்கள் அணிகள் பங்கேற்றுள்ளது. பெண்களை இந்த விளையாட்டுகளை கற்றுக்கொள்ள வைப்பதற்கான நோக்கமே அவர்களின் மன தைரியம்,தன்னம்பிக்கை உயர்வதற்கான வழி ஏற்படும். மழை,புயல் போன்ற பிரச்னைகளிலும் விளையாடுவதால் அதன்மூலம் சகிப்பு தன்மை அதிகரிக்கிறது. எது நடந்தாலும் ஏற்றுகொள்ளும் மன தைரியமும் உருவாகிறது.

பெருமை கிடைத்துள்ளது

அக் ஷயா,மாணவி,பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரி ,திண்டுக்கல்: நான் 6ம் வகுப்பு படிக்கும் போதிருந்தே பூப்பந்தாட்ட விளையாட்டில் பயிற்சி எடுத்து வருகிறேன். கல்லுாரியில் சேர்ந்ததும் ஆர்வம் அதிகரித்தது. இதனால் நானும் அதிகளவிலான போட்டியில் பங்கேற்று பல பரிசுகளை வென்றுள்ளேன். தற்போது தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்று ஸ்டார் ஆப் இந்தியா எனும் விருதை பெற்றுள்ளேன். இதனால் எனக்கும் என்னை சார்ந்தோருக்கும் பெருமை கிடைத்துள்ளது.

............

வாழ்வு கொடுக்கும்

ஞானமலர்,பயிற்சியாளர்,சென்னை: இந்த விளையாட்டில் பள்ளி மாணவர்கள் பயிற்சி எடுப்பதன் மூலம் முதல் கட்டமாக சுய ஒழுக்கம் மேம்படும். அடுத்தப்படியாக எங்கே எப்படி நடந்து கொள்ள வேண்டும். யாரிடம் எப்படி பேச வேண்டும் என வாழ்வின் உயரத்திற்கு செல்ல தேவையான அனைத்து நல்ல பண்புகளையும் கற்றுகொடுக்கும். இந்த விளையாட்டு மூலம் நமக்கு கிடைக்கும் வாய்ப்புகளை முறையாக பயன்படுத்தினால் நம் வாழ்க்கையே மாறிவிடும்.

...........






      Dinamalar
      Follow us