ADDED : ஏப் 25, 2025 02:14 AM

வடமதுரை:திண்டுக்கல்மாவட்டம் வடமதுரையில் காஸ் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தில் பேக்கரி முற்றிலும் எரிந்து நாசமானது.
வடமதுரை பைபாஸ் நால்ரோடு பகுதியில் பிரசாந்த், உதயக்குமார் உள்ளிட்ட 4 பேர் இணைந்து இரு மாதங்களுக்கு முன் பேக்கரி திறந்தனர். நேற்று மதியம் சமையல் கூடத்தில் பணிகள் நடந்தபோது காஸ் டியூப்பில் கசிவால் பற்றிய தீ சிலிண்டர் பகுதிக்கு பரவி எரிந்தது. ஊழியர்கள் அனைவரும் உடனடியாக வெளியேறினர்.
தீயானது அடுத்தடுத்த பகுதிகளுக்கும் பரவி கடை முழுவதும் எரிந்து தீக்கிரையானது. காஸ் சிலிண்டர்கள் அதிகம் இருந்ததால் அவ்வழியே ஒரு மணி நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. சிலிண்டர்கள் வெடித்ததில் பொருட்கள் சில வேடிக்கை பார்க்க கூடியிருந்த மக்கள் மீது விழுந்தன. இதையடுத்து பதறியடித்து ஓடினர். வேடசந்துார் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.