/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் சாய்பாபா கோயிலில் பாலபிேஷகம்
/
திண்டுக்கல் சாய்பாபா கோயிலில் பாலபிேஷகம்
ADDED : அக் 13, 2024 05:07 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: விஜயதசமி , சீரடி சாய்பாபாவின் நினைவு மகாசமாதி தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் சாய்பாபாவின் உருவச்சிலைக்கு பக்தர்களின் கரங்களால் மகாபாலபிஷேகம் நடந்தது.
விஜயதசமி ,சாய்பாபாவின் மகா சமாதி தினமான நேற்று திண்டுக்கல் நாகல் நகர்,பாரதிபுரத்தில் 5.8 அடி உயரம் கொண்ட சாய்பாபா தியான பீடம் கருவறையில் உள்ள சிலைக்கு திண்டுக்கல் மக்கள் மட்டுமின்றி மதுரை, திருச்சி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்திருந்த பக்தர்கள் பாலபிஷேகம் செய்தனர். தொடர்ந்து ஆரத்தி பாடல்கள் இசைக்க மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. அன்னதானம் வழங்கப்பட்டது.